மும்பையில் பலத்த மழை! வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது!

மும்பையில் பலத்த மழை காரணமாக வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மும்பையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மும்பையில், நேற்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாமல் தொடர்ந்து பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், இதனால் பல இடங்களில் … Read more

தனது சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் இளைஞர்.! குவியும் பாராட்டுகள்.!

மும்பையை சார்ந்த 31 வயதான ஷானவாஸ் ஷேக். இவரது தொழில் நண்பனின் சகோதரி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த பெண்ணை 5 மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்து விட்டனர். காரணம், காலியாக படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர்கள் இல்லை என்பதால் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, ஆறாவது மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பு ஆட்டோவிலேயே உயிரிழந்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் அடைந்தார் என ஷேக்  நண்பர்களில் டாக்டர்களாக இருந்த பலர் கூறினர். ஒருவேளை சரியான … Read more

மும்பையில் உள்ளூர் ரயிலை இயக்கிய பெண்மணியை பாராட்டிய மத்திய ரயில்வே.!

மும்பையில் ஊரடங்கு காரணமாக உள்ளூர் ரயில்கள் 84 நாட்களுக்கு மூடப்பட்ட பின்னர் ஜூன் 15 அன்று மீண்டும் இயக்கத் தொடங்கின. இந்நிலையில், ரயிலில் பயணிக்கும், பயணிகள் மற்றும் இயக்கும் ஓட்டுனர்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய ரயில்வே தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில், மும்பையில் உள்ளூர் ரயிலை இயக்கும் ஒரு பெண்மணி பெண் முககவசம் மற்றும் முகமூடி அணிந்து ரயிலை இயக்கும் புகைப்படத்தை … Read more

செல்லபிராணிகளுக்காக டெல்லியில் இருந்து சிறப்பு ஜெட்.! டிக்கெட் விலை ரூ.1,60,000 மட்டுமே.!

டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்ல பிராணிகள் ஜெட் விமானம் மூலம் அந்தந்த உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.  மும்பையை சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் முயற்சியில் தற்போது செல்ல பிராணிகள் சிறப்பு ஜெட் விமானத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டு செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுத்துள்ளார். இதற்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மொத்தமாக 9 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளதாம். ஒரு இருக்கையின் விலை 1,60,000 ரூபாய் … Read more

110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்த நிசர்கா..!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடந்ததாகவும், கடக்கும்போது 100-110 கி.மி. வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக … Read more

அரபிக்கடலில் உருவான ‘நிசர்கா’ புயல்.! ‘ரெட் அலர்ட்’ விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 7 மணி நேரமாக நகர்ந்து தற்போது அது தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக உருமாறியுள்ளது. இந்த நிசர்கா புயலானது மேற்கு-வடமேற்கில் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு-தென்மேற்கில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும் , சூரத்துக்கு தெற்கு-தென்மேற்கில் 640 கிலோ மீட்டர் தொலைவிலும் கொண்டுள்ளது. அந்த புயல் அடுத்த 10 … Read more

கொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கிற்கு சென்ற 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் கொரோனா பாதித்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால், 18 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவுக்கு அடுத்த உல்ஹாஸ்நகர் நகரில் 40வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதியானது.  இதனால், கடந்த மே 25ஆம் தேதி அப்பெண்ணின் உடலை உரிய பாதுகாப்பு வசதிகளோடு அடங்கிய பெட்டியில் வைத்து குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளனர்.  ஆனால், உறவினர்கள் அப்பெண்ணின் உடலை வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இறுதிச்சடங்கில் … Read more

பீர் தர மறுத்த நண்பர்களுக்கு கத்திகுத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

மும்பையில் பீர் தர மறுத்த நண்பர்களை கத்தியால் குத்திய கொலையாளியை, போலீசார் சில மணிநேரத்தில் பிடித்தனர். கத்தி குத்தப்பட்ட நபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.   மும்பையை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த அஜய் டிராவிட்டும் அவரது சகோதரன் விஜய் இருவரும் பீர் ஆர்டர் செய்து குடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சோனு என்ற அவர்களது நண்பர் வந்துள்ளார்.  அவர் அஜய் டிராவிட் மற்றும் விஜயிடம் பீர் கேட்டுள்ளார். அதற்கு இருவருமே தர மறுக்கவே கோபமடைந்த சோனு, … Read more

65 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வருவதை ஏற்க முடியாது.!

திங்கள், செய்வாய் கிழமைகளில் மும்பையில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது.  நாடு முழுவதும் கொரோனா முன்னெச்செரிக்கைக்காக 3ஆம் கட்டமாக மே 17வரையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதனால், சில மாநிலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  மஹாராஷ்டிரா மாநிலத்திலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த மும்பையிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு திங்கள், … Read more

கொரோனா பரிதாபங்கள் : குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி !

கொரோனா பரவலை தடுக்க குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி. கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் திருமணம், கோவில் திருவிழா மற்றும் கூட்டம் சேரும் அனைத்து விசேஷங்களும் நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ,மும்பையை சேர்ந்த திருமண ஜோடி ஒன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அவர்கள் குச்சியின் மூலமாக திருமண மாலையை மாற்றிக்கொண்டனர்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  வெளியாகி வைரலாகி … Read more