65 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வருவதை ஏற்க முடியாது.!

திங்கள், செய்வாய் கிழமைகளில் மும்பையில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது. 

நாடு முழுவதும் கொரோனா முன்னெச்செரிக்கைக்காக 3ஆம் கட்டமாக மே 17வரையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதனால், சில மாநிலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 

மஹாராஷ்டிரா மாநிலத்திலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த மும்பையிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு திங்கள், செய்வாய் கிழமைகளில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது. 

இது குறித்து, மஹாராஷ்டிராவில் பிரசுரமாகும் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாமனா-வில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், மதுக்கடைகள் மூலம் 65 கோடி கிடைப்பதற்காக 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வருவது நல்லதல்ல என கட்டுரை எழுதப்பட்டிருந்து. இதனை அடுத்து, தற்போது மும்பையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.