தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜின்பிங்..! பித்யா தேவி பண்டாரி பிரமாண்ட வரவேற்பு…!

அக்.11 மற்றும் அக்.12 என இரண்டு நாட்கள் இந்திய வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நேற்று இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிஙை நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க  காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று வருகை தந்தார்.அங்கு சென்ற அவருக்கு  பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சிறப்புகளை எடுத்து விளக்கினார்.இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பின்பு ஹோட்டலுக்கு சென்றார்கள். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி … Read more

தமிழக உணவு வகைகளை ருசிக்க காத்திருக்கும் சீன அதிபர் !

இரவு விருந்தில் சீன அதிபருக்கு தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. கடற்கரை கோயிலில் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர  மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு  நினைவு  பரிசு வழங்கினார் .இதற்கு பின் சீன அதிபருக்கு இரவு விருந்தில் தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.இந்த விருந்தில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளான  தக்காளி ரசம், சாம்பார், கடலைக்குருமா, தோசை, இட்லி, பொங்கல், வடை, கவுனி அரிசி அல்வா, உள்ளிட்ட உணவுகள்  வழங்கப்பட உள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

நினைவுப் பரிசுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்.மேலும் தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.      

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பால் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

விளக்கொளியில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஜொலித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.  

நிகழ்ச்சியை ரசிக்கும் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் கண்டு களித்து வருகின்றனர். பிரதமர் மோடி  தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்தார்.பின் அவருக்கு அங்குள்ள சிறப்புகளை விளக்கினார்.பின்னர்  மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்து வருகின்றனர் .பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் கண்டு ரசித்தனர்.