ஒரு டிரில்லியன் இலக்கு…. ஜன.27-ல் முதல்வர் ஸ்பெயின் பயணம்!

mk stalin

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த வருடம் சென்றதை போல், இந்த வருடமும் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். தமிழகதிற்கு ஒரு டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாகத்தான், சென்ற ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முன்னணி நிறுவனங்களை முதலமைச்சர் … Read more

பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்.. மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு.!

TamilNadu CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது. ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் … Read more

முதல்வரின் வெளிநாட்டு பயணம்… எந்தெந்த நாடுகளுக்கு.? எப்போது தொடக்கம்.? 

Tamilnadu CM MK Stalin

கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க  முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு  தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

tn minister cabinet

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், பிப்ரவரி 1-ஆம் தேதி … Read more

திமுக இளைஞரணி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்திற்கு பயணம்!

mk stalin

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக சேலத்தில் நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு உள்ளது. திமுக இளைஞரணி தலைவரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நிகழ்வுகள் இன்று … Read more

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவதே குறிக்கோள் : முதல்வர் சூளுரை.!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழாவை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “திராவிட மாடல் … Read more

தேசிய கீதத்துடன் தொடங்கியது கேலோ இந்தியா தொடக்க விழா!

KheloIndia

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கவும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் 3 நாள் பயணமாக இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். பிரதமர் மோடிக்கு வழி நெடுக பாஜக தொண்டர்கள் … Read more

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

pm modi

2024 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். 3 நாள் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ளார். தமிழம் வந்துள்ள பிரதமர் மோடியை, அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எவே வேலு ஆகியோர் வரவேற்றனர். திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், … Read more

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…

Khelo India 2024

இந்தியாவில் மாநில அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த முறை கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இன்று (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் துவங்குகிறது. கேலோ இந்தியா போட்டி! பதிவு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு! பிரதமர் மோடி வருகை : இன்று மாலை துவங்கும் கேலோ இந்தியா … Read more

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…. திமுக சார்பில் தேர்தல் பணி குழு அறிவிப்பு!

anna arivalayam

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி … Read more