#ElectionBreaking: வைகோவுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை.!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் அவசர ஆலோசனை. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சமரசம் செய்ய திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மதிமுக குழு அமைப்பு..!

தொகுதிப் பங்கீடு பற்றிய திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். நேற்று அதிமுக சார்பில் பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதைதொடர்ந்து,  நாளை மதிமுக, விடுதலை … Read more

தொகுதி பங்கீடு தி.மு.க தீவிரம்..! வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு..!

நாளை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக அழைப்பு விடுத்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். ஆனால், கடந்த 25-ஆம் … Read more

இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு – வைகோ இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு … Read more

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும்., எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் – வைகோ

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் எனவும் தொண்டர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் அதிகரித்தாலும் இல்லை, அதிகார பொறுப்புக்கு வரபோகிறோம் என்ற சொல்லக்கூடிய இடத்திலும் இல்லை. இருப்பினும், இவ்வளவு நிதியை தந்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்கும் போது, மக்கள் 27 ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், ஆகவே நடக்கின்ற நிகழ்ச்சிகள், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு ஏமாற்றமாகவும், … Read more

திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட முடிவுதான் – வைகோ

தமிழில் பேசுவதால் தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சேலம் மண்டலம் மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட முடிவுதான் பாஜகவுக்கு தற்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார். பாஜகவுடன் கைகோர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலை திட்டம் என இயற்ககைக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறார் என்றும் … Read more

கமல் வரவேண்டிய அவசியமில்லை., மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி – வைகோ

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்பர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார் எனவும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என்று அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது … Read more

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம் ! சமூக நீதிக்குச் சாவுமணி – வைகோ கடும் கண்டனம்

தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு … Read more

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றம்- வைகோ கடும் கண்டனம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றதிற்கு  வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு மெட்ரோ நிலையம், “பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ” என்று பெயர் மாற்றப்பட்டதற்கு  கடும் கண்டனம் எழுந்து வருகிறது.இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவல் அகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, … Read more

மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க – வைகோ வலியுறுத்தல்

மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், படிகள் வழங்க வேண்டும். கொரோனாவால் இறந்த செவிலியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் பதினான்காயிரம் செவிலியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் … Read more