தொகுதி பங்கீடு தி.மு.க தீவிரம்..! வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு..!

நாளை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். ஆனால், கடந்த 25-ஆம் தேதி திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் ஈடுபட திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தலைமையில் குழு ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் கே.என் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்எஸ் பாரதி, வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ஆம் தேதி என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடை உறுதிசெய்ய தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், தி.மு.க. தலைமை அலுவலம் அண்ணா அறிவாலயத்தில் இன்று  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது.

நாளை மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை திமுக அழைப்பு விடுத்துள்ளது. நேற்று அதிமுக சார்பில் பாமக உடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan