கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றம்- வைகோ கடும் கண்டனம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றதிற்கு 
வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு மெட்ரோ நிலையம், “பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ” என்று பெயர் மாற்றப்பட்டதற்கு  கடும் கண்டனம் எழுந்து வருகிறது.இந்நிலையில்
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவல் அகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகரத் தொடரி வெளியிடவில்லை.
இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
சென்னை வான்ஊர்தி நிலையத்தின் முன்பு இருந்த அண்ணா, காமராசர் பெயர்ப்பலகைகளை நீக்கினார்கள். இன்றுவரை திரும்ப வைக்கவில்லை. ஒருவேளை, சென்னைக்கும் அதானி பெயரைச் சூட்டத் திட்டம் வைத்து இருக்கின்றார்களா? என்பதற்கு, மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும் என்று தெவித்துள்ளார்.