“ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இவை கட்டாயம்” – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 6 பேர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.மேலும்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து … Read more

நியூமோகோகல் தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு ..!

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளார். 10 ஆயிரம் படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக தளங்களில் தளங்கள் உள்ள இடங்களில் ஜூலை இறுதிக்குள் அனைவரும் தடுப்புசி செலுத்தி முடிக்கப்படும். தடுப்பு சட்டத்தின் மூலம் நியூமோகோகல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் … Read more

#BREAKING: நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று மதியம் டெல்லி செல்வதாகவும், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளதாகவும், தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் உள்ளிட்ட  மொத்தம் 13 கோரிக்கைகளை வைக்க உள்ளதாக நேற்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரி டெல்லியில் மத்திய கல்வி … Read more

21 கிமீ மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 129 வது மெய்நிகர் திரை மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து அப்போட்டியில் பங்கேற்றார். அதிகாலை 4.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து போட்டியில் பங்கேற்ற அமைச்சர் 21 கிமீ தொலைவுக்கு நீண்ட மாரத்தானை,மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவு இடத்தில் நிறைவு செய்தார்.இந்த போட்டியில் அவருடன் காவல்துறையினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “கொரோனா பெருந்தொற்று பிறகு 10 நாட்கள் … Read more

கொரோனா குறைந்தவுடன் அம்மா மினி கிளினுக்குகள் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அம்மா மினி கிளினுக்குகள் திறக்கப்படும்  என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பிற அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமனை கழகத்தில் நேற்று அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து,செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:”தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.அதன்படி,கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலையை … Read more

மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன் அறிக்கை..!

மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை. பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களைக் காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள். செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் … Read more

பொது இடங்களில் ஆவிப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் மா .சுப்ரமணியன்…!

பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா  மையத்தை திறந்து வைப்பதற்காக காலை வந்தார். அவருடன் தயாநிதி மாறன் எம்.பி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எல்.ஏ எழிலன் ஆகியோர் வருகை தந்தனர். 100 படுக்கைகள் கொண்ட கொரோனா மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியம் , பொது இடங்களில் ஆவி … Read more

ஆக்சிஜன் படுக்கை வசதி.., அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

சேலம் மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். சேலம் அரசு மருத்துவமனை, மற்றும் தற்காலிக சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொருத்தவரை 1081 படுக்கைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையை மையமாக மிகச் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் 776 ஓட்டு வசதியுடன் கூடிய படுக்கைகள் … Read more