பொது இடங்களில் ஆவிப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் மா .சுப்ரமணியன்…!

பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா  மையத்தை திறந்து வைப்பதற்காக காலை வந்தார். அவருடன் தயாநிதி மாறன் எம்.பி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எல்.ஏ எழிலன் ஆகியோர் வருகை தந்தனர்.

100 படுக்கைகள் கொண்ட கொரோனா மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியம் , பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். பொது இடங்களில் ஆவி பிடித்தால் போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிக்கும். சென்னை, திருச்சி, ஈரோடு கோவை உள்ளிட்ட ஊர்களில் பொது இடங்களில் மக்கள் அதை பிடித்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதை ஊக்குவிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.  நேற்று சென்னையிலும் பல முக்கிய காரணமாக மக்கள் கூடும் ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் சில அமைப்புகளினால் ஆவி பிடிக்கும்  முறை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan