லேடி சூப்பர்ஸ்டாருடன் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி – வைரல் புகைப்படம் உள்ளே!

லேடி சூப்பர்ஸ்டாருடன் பாரதி கண்ணம்மா தொடர் நாயகி இணைந்து எடுத்த புகைப்படம் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடராகிய பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் ரோஷினி பிரியா. அண்மையில் இந்த தொடர் மிகவும் பிரபலமாகியது. அதற்கு காரணம் கண்ணம்மாவாக நடிக்க கூடிய ரோஷனி கர்ப்பிணியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறியதை வைத்து பல ட்ரோல்கள், மீம்ஸ்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ரோஷினி பிரியா, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நயன்தாரா !ரசிகர்கள் ஷாக் !

நடிகை நயன்தாரா  தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் . ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார்.

அஜித், விஜய், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களோடு நடித்தவர் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் கதைகளில் குதித்தார். அதிலும் மாயா, அறம் படம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது.

பேய்களை மையப்படுத்திய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா சர்மா நடித்து அண்மையில் பாரி என ஹிந்தியில் வெளியானது. இது அழுத்தமான பேய்கதையாக இருந்தாலும் பெரிதளவில் போகவில்லை. ஆனால் அனுஷ்காவுக்கு மிக முக்கிய கேரக்டராம் .

அதனால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முடிவெடுத்துள்ளாராம். அனுஷ்கா ரோலில் நயன்தாராவை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

கோலமாவு கோகிலா என்னும் படத்தில் நயன்தாராவுக்கு `இருக்கு ஆனா இல்லை’ங்கிற மாதிரி ஒரு ஜோடி. இப்படத்தில் நயனின் ரோல் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்.

இப்படத்தில் தங்கையா விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் நடிக்கிறார். அம்மாவா சரண்யா பொன்வண்ணன். அப்பாவா பழைய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி,நிஷாவும் நடிச்சிருக்காங்க. இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் படத்தில் ஹீரோ செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அனிருத்தின் இசை இப்படத்தில் செய்துள்ளதாக பெருமைப்படுகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

புகைப்படங்கள்:

Exit mobile version