சபரிமலை விவகாரத்தால் பிரதமர் மோடியின் கேரள பயணம் தள்ளிவைப்பு?

சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை வர இருந்தார். மீண்டும் 27 ஆம் தேதி கேரள வரும் அவர் திருச்சூர், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டப்பட்டிருந்தது. சபரிமலையில் 2 பெண்கள் வழிபட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,369 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த … Read more

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட மாநில ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்…!!

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிவுறுத்தியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலின் மரபில் இருந்து மாறுபட்டு, அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் 2 பெண்கள் சுவாமிதரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீசார் … Read more

கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேர் கைது…!!

சபரிமலைக்கு 2 இளம்பெண்கள் பெண்கள் சென்ற விவகாரத்தில், கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சபரிமலைக்கு சென்ற 2 இளம்பெண்கள், அங்கு ஐயப்பனை தரிசனம் செய்தனர். இது, பாஜக மற்றும் இந்து அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், மூணாறில், வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கங்கள், கடைகள் திறக்கப்படும் என … Read more

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக : பினராயி விஜயன்….!!

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு காவல் துறைக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். இதனை முன்னிறுத்தி மாநிலத்தில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் … Read more

கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி…!!

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு சார்பில் கேரளாவில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததைக் கண்டித்து, பல்வேறு இந்து அமைப்புகள் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்ற தவறிவிட்டதாக கூறி பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு … Read more

கேரளா முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வியாபார பொருட்கள் தேக்கம்…!

கேரளா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக தமிழக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த நிலையில், கேரளவிற்கு நாள்தோறும் விற்பனைக்காக செல்லும் சிறுகுறு வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சபரிமலை விவகாரம்: கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லை பகுதியில் நிறுத்தம்…!!

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளின் இயக்கம் முடங்கியதால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். கேரளா அரசு … Read more

கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு…!!

சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, திருவனந்தபுரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கேரள தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்களில் சிலர், உள்ளே நுழைய முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதையடுத்து, கேரளாவில் இன்று  முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

ஐயப்பன் கோவிலில் வழிபட்ட பெண்கள்…வைரல் வீடியோ…!!

ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.  அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு … Read more

ஐயப்பன் கோவிலில் வழிபட்ட பெண்கள்…காலை 3.45 மணிக்கு நுழைந்தனர்…!!

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்து திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சியில் கேரளாவில் பல்வேறு மத வெறி … Read more