கேரள நாட்டில் அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் வயநாடு..!

கேரள நாட்டில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில் இதிலிருந்து மக்களை காப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கினர். நான்காம் கட்டமாக 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் முதல் … Read more

மாணவிகளுடன் அமைர்ந்து மதிய உணவருந்திய ராகுல் காந்தி..!

கேரள மாநிலம் வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் இன்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார். இதனை அடுத்து மானந்தவாடியில் சட்ட படிப்பிற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் அமர்ந்து காங்கிரஸ் … Read more

அதிகரிக்கும் கொரோனா பரவல் : கேரளா விரைந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேரளா சென்றுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் தற்போது பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 1.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் அரசு திணறி வரும் நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் கேரளா சென்றுள்ளார். கேரளாவில் உள்ள கொரோனாவின் தீவிரத்தை அறியவும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு … Read more

ராகுல் காந்தி கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் – வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை திறப்பு!

கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாட்டில் காந்தி சிலையை திறந்து வைத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இப்பகுதியில் அடிக்கடி  சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார். கோழிக்கோடு விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து ராகுல்காந்தி வயநாட்டில் … Read more

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், மாவோஸ்யிடுகள் ஒட்டிய சுவரொட்டியால் கேரள மாநிலம் வயநாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு அமைந்துள்ளது. அங்கு கம்பமலை தேயிலை தோட்டத்திற்கு வந்த 4 மாவோயிஸ்டுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். இதனிடையே, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு … Read more

கேரளாவில் புதிதாக 20,452 பேருக்கு கொரோனா..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 20,452 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,52,090 ஆக அதிகரித்துள்ளது. இன்று கேரளாவில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,394 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 16,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். … Read more

மது வாங்க வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் – அரசு உத்தரவு..!

மது வாங்க வருபவர்கள் ஆர்டிபிசிஆர் கொரோனா நெகடிவ்  சான்றிதழை கட்டாயம்  கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது வரை குறையாமல், நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கடைகள், நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு … Read more

கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்…!

கேரளா மாநிலத்தில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பரப்பிய சிவானந்தர் காலமானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் எனும் ஊரில் 1946 ஆம் ஆண்டு கொச்சன் – பொலியாள் தம்பதிக்கு 12-வது மகனாக பிறந்தவர் தான் சிவானந்தர். இவர் தனது சிறு வயதில் இருந்தே திருக்குறள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். இதனையடுத்து மக்களிடம் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதை தனது முழுநேரப் பணியாக செய்து வந்துள்ளார். இவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் … Read more

கேரளாவில் புதிதாக 13,049 பேருக்கு கொரோனா..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,049 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 13,049 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கேரளாவில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,852 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 20,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,77,691 பேர் வீடு திரும்பியுள்ளனர். … Read more

வரும் நாட்களில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகலாம்-சுகாதாரத்துறை அமைச்சர்..!

வரும் நாட்களில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகலாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டப்பேரவையில் பேசிய அவர், கேரளாவில் அதிக அளவு டெல்டா வகை கொரோனாவால் 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நாட்டில் மூன்றாம் அலை தொடங்கவிருக்கிறது. இருந்தபோதிலும் கேரளாவில் இரண்டாவது அலை இன்னும் முடியாமல் தீவிரமாக பரவி வருகிறது.  இதன் காரணத்தால் கட்டுப்பாடுகள் கேரளாவில் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளது. மேலும், … Read more