ஜெய்பீம் படம் பார்த்தேன்; கண்கள் குளமானது…! – கமலஹாசன்

ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது என ஜெய்பீம் படம் குறித்து கமலஹாசன் ட்வீட். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டு ரசித்த நிலையில், படக்குழுவுக்கும் முதல்வர் … Read more

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம்…! – கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், நிலக்கரி தட்டுப்பாடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், நிலக்கரி தட்டுப்பாடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தின் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட். கோடைக்காலத்தில் இது சுமார் 17,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மி நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிகழ்கிறது. அனல்மின் நிலையங்கள் … Read more

இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித்..! இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும் – கமலஹாசன்

இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித்-க்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன். கோவையை சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார். இவரது தாய் அமிர்தவள்ளி வாய் பேசாத இயலாத, செவி திறனற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஆவினில் பணியாற்றி வருகிறார். ஒரே அண்ணன் மருத்துவராக உள்ளார். ரஞ்சித் குமார் அவர்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற குழந்தையாக தான் பிறந்துள்ளார். பிறந்த ஆறு மாதத்தில் குறையை கண்டறிந்த பெற்றோர் … Read more

“சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்” – கமலஹாசன்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை! நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இந்தத் தேர்வின் தீவிளைவுகளைப் பட்டியலிடுகிறது. அதன்படி, … Read more

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்…! தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறிய கமலஹாசன்…!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனுஷின் பெற்றோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.  இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும்  கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அந்த இரண்டு … Read more

தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் போதைக் கலாச்சாரம்…! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கமலஹாசன்

தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை. தமிழகத்தில் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களது குடும்பங்கள் சீரழிவதுடன், போதை தலைக்கேறிய பின் வாகனம் ஓட்டுவதால், பல சாலை விபத்துக்களும் நிகழ்கிறது. இதனால், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பாட்டுக்கு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் … Read more

‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன் – கமலஹாசன்

தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த ‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன். நீதிபதி கிருபாகரன் அவர்கள் 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் 62 வயது நிறைவடைவதையடுத்து, இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து இவருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், பல வழக்குகளை மிகவும் சாதூர்யமாக கையாண்ட நீதிபதி கிருபாகரன் … Read more

இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள், ஜாக்கிரதை..! – கமலஹாசன்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கமலஹாசன் ட்வீட்.  எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் மாற்றுவது போல, சமையல் எரிவாயுவின் விலையையும் மாதத்திற்கு ஒருமுறை மாற்றுகிறது. இந்நிலையில், வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க … Read more

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும். இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும்.’ … Read more

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி – கமலஹாசன்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய … Read more