அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராடியதால் பரபரப்பு…!

திருநெல்வேலி:பாவூர்சத்திரத்தில் மாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பேருந்தைச் சிறைபிடித்துப் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மேலப்பாவூர், திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, மேலப்பாட்டாக்குறிச்சி உள்பட பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பேருந்துகளில்தான் பள்ளிக்கு வந்துச் செல்கின்றனர். அரசு வழங்கியுள்ள இலவச பேருந்து பயண அட்டை வைத்துள்ள மாணவர்கள் அதன்மூலம் … Read more

அனைத்து அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அரசு உத்தரவு…

தூத்துக்குடி:இந்தாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று மாலையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உயர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாள்ர்களிடம் கூறியது: “கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவில் … Read more

2017 ஆண்டுக்கான OJEE தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் 12 இல் தேர்வு நிரப்புதல், ojee.nic.in முடிவுகளை சரிபார்க்கவும்

OJEE 2017 முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். ஆகஸ்ட் 12 ம் திகதி சாய்ஸ் நிரப்புதல் நடைபெறும். இறுதி பட்டியல் ஆகஸ்ட் 13 ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் அடுத்த நாளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிப்பார்கள். முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். வியாழக்கிழமை 11 மையங்களில் நடைபெற்ற சோதனைக்கு 6,921 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பரீட்சை பொறியியல் நீரோடைகளில் பெரிய அளவிலான வெற்றிடங்களை நிரப்ப கடைசி விருப்பமாக நடத்தப்பட்டது. B-Tech, MBA க்காக 905 மாணவர்கள் மற்றும் MCA … Read more

சிபிஎஸ்இ 10 வகுப்பு மறுதேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வரும்….!

சி.பி.எஸ்.இ. வகுப்பு 10 பிரிவு மறுதேர்வு முடிவுகள் 2017 அடுத்த வாரம் வரும். முடிவுகள் வியாழன் முன் வெளியிடப்படலாம். முடிவுகளை அறிவிக்க அனைத்து தயாரிப்புகளும் நடந்து வருகின்றன என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருமுறை அறிவித்தது முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்க முடியும். ஆகஸ்ட் மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று பல ஆதாரங்கள் உறுதிப்படுத்தின. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. வருடாந்த பரீட்சையின் அனைத்து பாடங்களுக்கும் தகுதிபெற முடியாத மாணவர்கள் கம்பனி … Read more

30% கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு: ஏஐசிடிஇ அதிரடி

புதுடெல்லி: 30 சதவகிதத்துக்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் குறைவாக சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் அனில் டி.சாஸ்ரபுத்தே தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மூட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 10,361 பொறியியல் கல்லூரிகளில் … Read more

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் மதிமுக செயலாளர் வைகோ உட்பட 300 பேர் கைது…!

சென்னை:தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிரான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தடைகோரி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட மதிமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பிரதமர் மோடியின் கொடும்பாவியை அவர்கள் எரித்தனர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வைகோ உட்பட … Read more

கோவில்பட்டியில் மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த அரசு உதவிபெறும் பள்ளியை கண்டித்து SFI தலைமையில் போராட்டம்…!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியான A.V உயர்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் நடைபெற்றுள்ளது.மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து மாநகராட்சி சுகாரத்துறை நல அலுவலரிடம் கையொப்பம் பெற்றுவருமாறும் அலைகழித்து வந்துள்ளது. இதனை கண்டித்தும் முறைகேடுகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் திரு.கணேசன் அவர்களிடம் மனு கொடுத்தனர். … Read more

அதிரடி வீடியோ விளையாட்டுகள் மூளை செயல்பாட்டை பாதிக்கக்கூடும்: ஆய்வு

வாஷிங்டன்: ஒரு புதிய ஆய்வில் பல விஷயங்களில், கேமிங் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைத்துள்ளதால், நீங்கள் அதிக மூளைச் சக்தியைப் பெறுவதற்கு முன் மறுபரிசீலனை செய்யலாம். யுனிவர்சல் டி மாண்ட்ரீயல் ஆய்வில், கிரெக் வெஸ்ட் இசையமைப்பாளர் கிரெக் வெஸ்ட், விளையாட்டுகளில் பழக்கமான விளையாட்டு வீரர்கள், அவர்களின் ஹிப்போகாம்பஸ், மூளையின் ஒரு முக்கிய பகுதியாக குறைவான சாம்பல் பொருளைக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் ஹிட்டோகாம்பாஸ் ஆனது, மேலும் ஒரு நபர் மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா, … Read more

“பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க முடியாது” – வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அரசின் கொள்கை முடிவுகளை வரைவு செய்வது உச்சநீதிமன்றத்தின் பணி இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மூத்த வழக்கறிஞரும், டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் யோகா … Read more

தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா..?

சென்னை: தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேநேரத்தில் இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களுக்கு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முடங்கிக் கிடந்த … Read more