கோவில்பட்டியில் மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த அரசு உதவிபெறும் பள்ளியை கண்டித்து SFI தலைமையில் போராட்டம்…!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியான A.V உயர்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் நடைபெற்றுள்ளது.மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து மாநகராட்சி சுகாரத்துறை நல அலுவலரிடம் கையொப்பம் பெற்றுவருமாறும் அலைகழித்து வந்துள்ளது.
இதனை கண்டித்தும் முறைகேடுகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் திரு.கணேசன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செ.சுரேஷ் பாண்டி,இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் கோவில்பட்டி பொறுப்பாளர் சக்திவேல் முருகன் மற்றும் CITU மாவட்டக் குழு உறுப்பினர் தேவேந்திரன் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment