“பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க முடியாது” – வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

“பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க முடியாது” – வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

Default Image

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அரசின் கொள்கை முடிவுகளை வரைவு செய்வது உச்சநீதிமன்றத்தின் பணி இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞரும், டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், என்.சிடி, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி போன்றவற்றிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், தேசிய யோகா கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

Join our channel google news Youtube