#INDvsENG : 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு ..?

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.  நேற்று நிறைவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் … Read more

147 ஆண்டுகளில் முதல்முறையாக…ஜெய்ஸ்வால் உலக சாதனை..!

Yashasvi Jaiswal

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் ஜடேஜா 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டை பறித்தார். இதற்கிடையில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 20-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் … Read more

INDvsENG : இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

INDvENG

இந்தியா- இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி  319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில் … Read more

மீண்டும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம்… இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு..!

Yashasvi Jaiswal

இங்கிலாந்து இந்தியா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது.  இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைதொடங்கிய இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளர் செய்தது. இதனால் … Read more

கெவின் பீட்டர்சன் சாதனையை முறியடித்த பென் டக்கெட் ..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் வெற்றியின் முனைப்பில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் மற்றும் ஜடேஜாவின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை சேர்த்தது ஆல்-அவுட் ஆனது. இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது … Read more

#INDvsENG : அடுத்தடுத்து சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல் ..! 322 ரன்களில் இந்திய அணி முன்னிலை..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  முதல் நாள் முடிவில் இந்திய அணி  5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து 2-வது நாளில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் 131 ரன்களும், … Read more

#INDvsENG : பென் ஸ்டோக்கை வீழ்த்தி சாதனை படைத்த ஜடேஜா..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல்  இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. இதனால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு புறம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அவரது பங்கிற்கு … Read more

சர்பராஸ் கான் தந்தைக்கு மஹிந்திரா தார் ஜீப் ..! பரிசளிக்க விரும்பும் ஆனந்த் மஹிந்திரா ..!

இந்தியா, இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் சர்பராஸ் கான் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிக பெரிய எதிர்பார்ப்பை அவரிடமிருந்து இந்திய அணியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருந்தது. சர்பராஸ் கானின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வந்தனர். சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் ஒரு சிறிய தவறால் … Read more

#INDvsENG : அஸ்வினுக்கு பதில் இவரா..? எம்சிசியின் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா..?

இந்தியா, இங்கிலாந்து இடையேயான நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 3-வதுநாள் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் ! முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். … Read more

ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் !

Ashwin 709

ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார்,அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவ தேவையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது.  அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது. இந்த சவாலான … Read more