#INDvsENG : பென் ஸ்டோக்கை வீழ்த்தி சாதனை படைத்த ஜடேஜா..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல்  இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. இதனால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு புறம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அவரது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை தட்டி தூக்கினார். அவர் கைப்பற்றிய இந்த இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கடந்த 5-வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

சர்பராஸ் கான் தந்தைக்கு மஹிந்திரா தார் ஜீப் ..! பரிசளிக்க விரும்பும் ஆனந்த் மஹிந்திரா ..!

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன் ஜடேஜா 199 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். மேலும்,  ரவீந்திர ஜடேஜா 201 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்திய மண்ணில்  200 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் :

  • அனில் கும்ப்ளே                    – 350 விக்கெட்
  • ரவிச்சந்திரன் அஸ்வின்    – 347 விக்கெட்
  • ஹர்பஜன் சிங்                        – 265 விக்கெட்
  • கபில் தேவ்                                 – 219 விக்கெட்
  • ரவீந்திர ஜடேஜா                      – 201 விக்கெட்

 

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment