#JustNow: விசாரணையின்போது ஒழுங்கீனம் – வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிப்பு!

விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்த உயர்நீதிமன்றம்.  காணொளி வாயிலாக விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொளி விசாரணையின்போது பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவரை வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே 34 நாட்களாக சிறையில் இருந்து வருவதால் தண்டனையை கழித்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் … Read more

#BREAKING: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து – ஐகோர்ட் உத்தரவு

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து. கொரோனா விதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2020-ல் கரூரில் பதிவான 4 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது. அதாவது, பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகள் எதையும் மீறவில்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை ஏற்று வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

#BREAKING: ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயன்பெறும் வகையில் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில், எரிபொருகளின் விலைக்கு … Read more

#BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. காவல்துறையை விமர்சித்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2014-ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல்துறையை ஐ.பெரியசாமி விமர்சித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ள வழக்கு என்பதால் அதை ரத்து செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.

அவதூறு பேச்சு-நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக பதிவிட்ட புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக நடிகரும்,பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டது.இதனையடுத்து,தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகார் தொடர்பான விசாரணையில் நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.தனது … Read more

#BREAKING: தகுதி தேர்வில் வெல்லாதோர் ஆசிரியர் பணியை தொடரக்கூடாது – ஐகோர்ட்

தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாணையின்போது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுமாறு ஏற்கனவே அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி உரிமை … Read more

#BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 69 சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் … Read more

இவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்,இன்று தீர்ப்பு. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. அந்த மனுவில்,மருத்துவம்,பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை … Read more

பொங்கல் பரிசு வழக்கு – அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

பொங்கல் பரிசு தொடர்பான வழக்கில் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்காய் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ பெரியசாமி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிசு தொகுப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு … Read more

#BREAKING: சத்தியமங்கலத்தில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி – ஐகோர்ட் தீர்ப்பு

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகுரக வாகனங்கள் இரவில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவுநேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இந்த நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் இலகுரக வாகனங்கள் இரவிலும் செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து, அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவை – பெங்களூரு சாலையில் … Read more