இவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்,இன்று தீர்ப்பு.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு உதவு பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன.

அந்த மனுவில்,மருத்துவம்,பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை விரிவுபடுத்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்துள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளன.மேலும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை எதிர்த்தும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்ததாக கூறப்படும் நிலையில்,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.