#Breaking:கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது – கூறும் தேர்தல் ஆணையம்!

அரசியல் கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தகவல். அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது அக்கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவுகளாகும்.மேலும்,தேர்தலுக்கு முன்போ,பின்போ இலவசங்கள் வழங்குவது என்பது கட்சிகளின் கொள்கை முடிவுகளாகும். இதனால்,இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் … Read more

#BREAKING: டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி, சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி என்பவர் போட்டியிட்டனர். இருவரும் தலா 284 வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி வெற்றி பெற்றதாக அறிவித்த, சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் தனது வெற்றி பறிபோனதாகவும், திமுக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்துவிட்டு, தான் … Read more

#BREAKING: 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் வரவு, செலவு கணக்குகள் விவரத்தினை உரிய அலுவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி நிலவரம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் வார்டுகள் 1374: இதில், 1373 இடங்களுக்கான … Read more

#BREAKING: தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நேற்று வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19-ஆம் … Read more

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பேரணிக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் போட்டியிட தடை இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டிமிடுவதற்கான தகுதி மற்றும் தகுதியின்மையில் கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் போட்டியிடுவது குறித்து ஏதும் வரையறை செய்யப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டக்கூறு 12-ல் “மாநிலம்” என்ற வரையறைக்குள் கூட்டுறவு சங்கங்கள் கொண்டு வரப்படாததால் கூட்டுறவு சங்க அலுவலர்கள் … Read more

தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது – தேர்தல் ஆணையம்

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், சென்னைக்கு மட்டும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படும் … Read more

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி சாதாரண … Read more

#BREAKING: செப்டம்பர் 13ல் தமிழகத்துக்கு ராஜ்யசபா தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா (மாநிலங்களவை) இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தல் மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக தனித்தனியாக நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினராக … Read more