#BREAKING: குஜராத், இமாச்சலம் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று வெளியிட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகள், இமாச்சலில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநிலங்களுக்கும் … Read more

#BREAKING: 6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கனா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோத்ரநாத் (உத்ரப்ரதேசம்) மற்றும் தாம்நகர் (ஒடிசா) ஆகிய சட்டப்பேரவை … Read more

தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை சமர்பித்தது அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 25,00க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை ஈபிஎஸ் தரப்பிடம் வழங்கியிருந்தனர். டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் வழங்கினார். சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் இடைக்கால பொதுச்செயலாளரை செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆதரவு கடிதம் பெறப்பட்டது.

#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் “ஆதரவுக் கடிதம்”.. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, … Read more

#BREAKING: 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சி பதிவு நீக்கம் – தேர்தல் ஆணையம்

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் என கூறியுள்ளது. மேலும், செயல்படாமல் இருந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத … Read more

ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த பணிகளை … Read more

#BREAKING: இவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையம்

17 வயதானவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நாட்டில் 17 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, 17 வயது நிரப்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய … Read more

111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்!

அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையம் 1951 ஆர்பி சட்டம் பிரிவுகள் 29A & 29C க்கு கட்டுப்படாததற்காக (2100 RUPPs) களுக்கு எதிராக தரப்படுத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு 111 … Read more

நாடு முழுவதும் 87 அரசியல் கட்சிகள் அதிரடி நீக்கம்! – இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து 87 கட்சிகள் அதிரடி நீக்கம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி நாட்டில், 2,796 பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகள் நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. இதனால், தேர்தல்களில் போட்டியிடாத, முறையாக கணக்குகள் … Read more

#Breaking:புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – குடியரசுத்தலைவர் முக்கிய உத்தரவு!

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை … Read more