புதுசேரியில் புதிய அறிமுகம்.! நடமாடும் ஏ.டி.எம் இன்று முதல்…

புதுசேரி அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், பொது மக்களின் அலைச்சலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று புதுசேரி அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதுசேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

கோயம்பேடு : 600 கடைகள் மட்டும் திறக்க அனுமதி.! சிறு வியாபாரிகள் அதிருப்தி.!

1900 கடைகளில் 600 கடைகள் மட்டும் சரியான சமூக இடைவெளியோடும், உரிய விதிகளுக்குட்பட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அமைந்தகரை பகுதியில் 450 சிறிய கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மே 1ஆம் தேதி முதல் 850 பழக்கடைகள் மூடப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை கோயப்பேடு காய்கறி சந்தையில் ஏற்கனவே காய்கறி வியாபாரி, சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பூ வியாபாரிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையை 3ஆக பிரித்து கோயம்பேடு, … Read more

கொரோனாவுக்கு எதிரான போரில் துணிச்சலுடன் களமிறங்கிய இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

உலக வல்லரசு நாடாக அறியப்பட்ட அமெரிக்காதான் தற்போது கொரோனாவிலும் முன்னணியில் இருக்கிறது. அங்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. இது குறித்து இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரேஷ் ரெட்டி பேட்டியளித்தார். அதில் இந்திய மருத்துவர்களின் கொரோனா தடுப்பு பங்களிப்பு, அமெரிக்காவின் மருத்துவ நிலை என பலவற்றை பற்றி கூறியுள்ளார். அந்த பெட்டியிலிருந்து டாக்டர் சுரேஷ் ரெட்டி கூறிய சில கருத்துக்கள் இதோ, ‘ இதுவரை பொருளாதாரத்தில் முதல் இடம் என … Read more

2 காவலர்களுக்கு கொரோனா.! நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மூடல்.!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டுள்ள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவர் வசித்த பகுதி, வேலைக்கு செய்யும் பகுதி என அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே விடாமலும், அங்கிருப்பவர்களை வெளியில் அனுப்பாமலும் அவர் பழகிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுவது வழக்கம். அந்தளவிற்கு கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் … Read more

செப்டம்பர் மாத இறுதி வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை செப்டம்பர் மாதம் வரையில் மூடப்படுவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வங்காள தேசத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நாட்ட்டில் இதுவரை 5,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை செப்டம்பர் மாதம் வரையில் மூட உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள், … Read more

1000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.! விரைவில் அறிமுகம்…

1000 ரூபாய் விலையில் மருத்துவ சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். விரைவில் துல்லியமான புள்ளிவிவரம் வெளியாகும். என புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்  ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த தடுப்பூசி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் … Read more

கொரோனா பாதித்தவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ளலாம்.!

கொரோனா பாதித்த நபர் தன்னை தானே அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். ஏனெனில், ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்த முடியாது – மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். அதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பேசுகையில், ‘கொரோனா பாதித்த நபர் … Read more

தமிழகத்தில் 1100-ஐ தாண்டியது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை.!

தமிழகத்தில் இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று புதியதாக 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1937-ஆக உள்ளது.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டுமே 47 பேருக்கு கொரோனா உறுதியாகி, இதுவரை 570 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறு மகிழ்ச்சி … Read more

216 மருத்துவ ஊழியர்களுடன் தென் ஆப்பிரிக்காவிற்கு பறந்த கியூபா மருத்துவ குழு.!

கியூபா நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உதவும் நோக்கத்துடன் மருத்துவக்குழு செல்வது போல 200க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுடன் கியூபா மருத்துவ குழுவானது தென் ஆப்பிரிக்கா பறந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், கியூபா நாட்டிலிருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரகணக்கான மருத்துவ … Read more

சமூக இடைவெளியை இந்த சிங்கங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.!

இரண்டு சிங்கங்கள் முன்னே இடைவெளி விட்டு செல்ல 2 சிங்கங்கள் பின்னே இடைவெளி விட்டு செல்கின்றன. இந்த வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால், அதிகளவு மாசு குறைந்துள்ளது. மனித  நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், காட்டு மிருகங்கள் வீதியில் நடமாடும் செய்தியை அவ்வப்போது செய்தியாக பார்த்து வருகிறோம் அப்படி தற்போது இணையத்தில் ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், 4 சிங்கங்கள் சாலையில் … Read more