மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.! – கோரிக்கை விடுத்த மாநில அரசுகள்.!

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முழுஊரடங்கை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமருடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் இன்று … Read more

மே 4 முதல் ஒரு நாளைக்கு 150 பேர் வீதம் இலவச பொருட்கள்.! – அமைச்சர் காமராஜ் தகவல்.!

மே மாதத்திற்கான விலையில்லா நியாய விலைக்கடைபொருட்கள் மே-4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு ரேஷன் கடை பொருட்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்து ஏப்ரல் மாத பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்து, மே மாத ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. … Read more

அரசு கல்லூரியை சிறைச்சாலையாக்கிய புதுச்சேரி அரசு.!

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலை அரசு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு  வருகிறது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலையானது தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது. சிறைச்சாலையானது, புதுசேரி அரசு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. தற்காலிக சிறையாக மாற்றப்படும் அரசு கல்லூரியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக் குழுவும் … Read more

கொரோனாவை குணப்படுத்தும் பிளாஸ்மா சிகிச்சை.! விரைவில் தமிழகத்தில்…

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் உடனே சிகிச்சை அளிக்கப்படும். – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனாவை வைரஸை அழிக்க உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, குணமடைந்து சென்றவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து, அதில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, அதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்தும் முயற்சியில் தமிழகம் முயன்று வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை … Read more

மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி கடனுதவி.! ஆர்.பி.ஐ அறிவிப்பு!

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆர்பிஐ ரூ.50,000 கோடி கடனுதவியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால், தொழில் நிறுவனங்கள் பெருமளவு இயங்காமல் உள்ளன. பொதுமக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாததால் மாத தவணை தொகையை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசத்தை ஆர்பிஐ வழங்கியது (வங்கிகளின் விதிகளுக்குட்பட்டு). Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் பண்ட் திட்டங்களை முடக்கியதால் பல மியூச்சுவல் பண்ட் முதலீட்டார்கள் பாதிக்கும் சூழல் உருவானது. இதனை அடுத்து, மியூச்சுவல் … Read more

சொத்து வரி, குடிநீர் கட்டணத்திற்கு 3 மாத கால அவகாசம்.! அரசாணை வெளியீடு.!

சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் பலரும் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மக்களின் நிலை அறிந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை.!

தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885-ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் இன்று மட்டுமே 28 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 60 பேர் சிகிச்சை முடிந்து வீடு … Read more

கொரோனா தடுப்பு மருந்து.! 3 தடுப்பூசிகளுக்கு சீனா ஒப்புதல்.!

சீனா ராணுவம் தயாரித்தது உட்பட 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வுக்கு மேற்கொள்ள சீன அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கிய சீனாவில் இதுவரை 82,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,632 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் ஈடுபட்டு, முதற்கட்டமாக தடுப்பூசி கண்டுபிடித்து அதனை 96 பேருக்கு செலுத்தி அவர்களை … Read more

சீனாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.!

சீனாவில் நேற்று மட்டுமே 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கிய சீனாவில் இதுவரை 82,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,632 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தும் நேற்று ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் ஒருவருக்கும், 11 வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரானா உறுதியானது தெரியவந்துள்ளது. நேற்று மட்டுமே 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா வைரஸால் யாரும் உயிரிழக்கவில்லை. நேற்று 89 பேர் கொரோனாவு சிகிச்சையில் … Read more

எளிமையான திருமணம்.! ஆன்லைனில் ஆசீர்வதித்த உற்றார் உறவினர்கள்!

தஞ்சையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை ஜூம் ஆப் மூலம் இணையத்தில் இணைத்து அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். கொரோனா முன்னெச்செரிக்கையாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது மே மாதம் 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் என பலநிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சையில் இந்த ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை … Read more