நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு, விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உதகையில் பழங்குடியின மக்கள் 21,800 பேர் தடுப்பூசி போட தகுதி … Read more

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கில், தமிழக அரசு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என … Read more

10 திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வசதியாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு வங்கி சார்பில் ஆவின் பூத் ஒன்றும்  அமைத்து தரப்பட்டது. பின்னர் உதவிகளை பெற்றுக்கொண்ட திருநங்கைகள், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.