அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக கொடுத்த பூரணம் அம்மாள்

அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியை செய்து வருகிறார். 31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு வரை … Read more

ராமர் கோயில் கட்டுவதற்கு 51 லட்சம் நன்கொடை வழங்கிய காங்கிரஸ் எம்.ஏ.ஏ அதிதி சிங்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் இதற்காக 51 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த வருடமே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதற்கான கட்டுமான பணிகளுக்கான நன்கொடை வசூலிப்பு உலகம் முழுவதிலும் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில் பலரும் தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் அவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் … Read more

கொரோனா தடுப்பு பணிக்கு 1 பில்லியன் நிதி வழங்கிய ட்விட்டர் இணை நிறுவுனர்.!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு இன்னும் சரியான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தரவும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், … Read more

அரசு பணமல்ல என் பணம்.! ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.1 கோடி தருவதாக அறிவித்த மகாராஷ்டிர முதல்வர்.!

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் ஜன்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி தருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை பணம் தாக்கரேவின் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம் என்றும், அரசாங்க பணம் இல்லையென்றும் அவர் ஒரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதிவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில், நினைவுகூரும் வகையில் தனது மகன் ஆதித்யாவுடன் அயோத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10 திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வசதியாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு வங்கி சார்பில் ஆவின் பூத் ஒன்றும்  அமைத்து தரப்பட்டது. பின்னர் உதவிகளை பெற்றுக்கொண்ட திருநங்கைகள், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.