ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி… கைதான சகோதரர் வைபவ் பாண்டியா!

Vaibhav Pandya

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார். … Read more

உ.பி-யில் இறைச்சி இறக்குமதி தடை நீக்கம்.!

கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த காய்ச்சல் பரவாமல் இருக்க பிற பகுதிகளில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில, மத்திய அரசு அளித்த ஆலோசனையைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலிருந்து கோழி இறக்குமதி செய்வதற்கான தடையை நேற்று நீக்கியது உத்தரபிரதேச … Read more

வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்படும்  வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா நேற்று வடகிழக்கு 2020 என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம், மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் காணொளி காட்சி மூலம்  இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, … Read more

வெளிமாநிலத்தில் இருந்து வணிக ரீதியாக வருபவர்களுக்கு இ- பாஸ்.!

வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு இ – பாஸ் வழங்கப்படும். சமீபத்தில்  விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.  கொரோனா உள்ளவர்களை அடையாளம் காணவே இந்த இ – பாஸ் முறை என கூறினார். இந்நிலையில், வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு  இ – பாஸ் வழங்கப்படும், மேலும் அவர் 72 மணி நேரத்தில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு.!

கச்சா எண்ணெய் சரிவு, ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.  மேலும் சற்று நேரத்திற்கு முன் சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் சரிந்து 35,503 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 574 புள்ளிகள் வீச்சியடைந்து, 10,415 புள்ளிகள் வர்த்தகமாகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் … Read more

10 திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க வசதியாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு வங்கி சார்பில் ஆவின் பூத் ஒன்றும்  அமைத்து தரப்பட்டது. பின்னர் உதவிகளை பெற்றுக்கொண்ட திருநங்கைகள், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

இன்றைய (செப்டம்பர் 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.15  காசுகளாகவும் விற்பனையாகிறது.

புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை! 29,000-ஐ நெருங்கியது!

தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,612-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,896-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,769-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.30,152-க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.48,500-க்கும் விற்பனையாகிறது.

விண்ணை தொடும் தங்கம் விலை! 28,500-ஐ தாண்டியது!

இன்று பலராலும் விரும்பி வாங்கப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், 22 கேரட் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.28,568-க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.3,571-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து, ரூ.47.90-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில், சவரனுக்கு ரூ.2,088 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கருத்துக்கணிப்பால் ஏற்றம் காணும் பங்குச்சந்தை!

தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பங்குசந்தை நிலவரம் ஏற்றம் கண்டுள்ளது. இம்முடிவுகளால் பங்குகளின் மதிப்பு ஒரே நிமிடத்தில், ரூ.3.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது மும்பை குறியீட்டெண் செஞ்செக்ஸ் 1.400 புள்ளிகள் உயர்ந்து  39.331 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டெண் நிஃப்டி 411 புள்ளிகள் உயர்ந்து,  11,819 புள்ளிகளாகவும் உள்ளது.