#Breaking: கொரோனா நிவாரணத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி!

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கமாறு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்த நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு … Read more

சிவக்குமார் குடும்பத்தினர் 1 கோடி கொரோனா நிவாரண நிதி..!

சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் … Read more

#Breaking: நாளை சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் – தமிழக அரசு அழைப்பு

நாளை சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கட்சிகளை சார்ந்த சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்களை கொண்டு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நான் அறிக்கை விடுத்திருந்தேன்.. இன்று இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மகிழ்ச்சி – ராமதாஸ், பாமக

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துருந்தார். மேலும், உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் … Read more

தமிழக அரசியல் வெற்றியிடத்தை நிரப்பிவிட்டார் மு.க.ஸ்டாலின் – துணை சபாநாயகர்

மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் என துணை சபாநாயகர் பேச்சு. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றியிடத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார். கட்சி பாகுபாடியின்றி அனைவரும் பேச சட்டப்பேரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டத்தை மதித்து நாகரிகமான சபாநாயகராக நடந்து கொள்வேன் … Read more

#Breaking: மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தவகையில், ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு … Read more

#breaking: நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

முழு ஊரடங்கில் நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகை, தேநீர் மற்றும் பால் கடை போன்ற அத்தியாவசிய கடைகல் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுயிருந்தது. இந்த நிலையில், ஓரடங்கில் மேலும் சில … Read more

#Breaking: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் – தமிழக அரசு அறிவிப்பு

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தொழில் நிறுவனங்கள், வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் பங்கேற்றுயிருந்தனர். இந்த நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து … Read more

நன்கொடை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முதலமைச்சரின் பொதுநிவராண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பேரிடர் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு – தமிழக அரசு

முதல்வர் ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. இந்த நிலையில், … Read more