தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? – அமைச்சர் விளக்கம்!

கொரோனா 3வது அலை குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்று முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பின்போது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 வகையாக தமிழக அரசு பிரித்து கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்திருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் … Read more

தூய்மையான காற்றை சுவாசிப்பது போல் உள்ளது-ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்..!

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி அனைவருக்கும் ஆரோக்கியமான வழி என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது திமுக. திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவருக்கு பாராட்டுகளையும் … Read more

#Breaking: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரிக்கை. உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை தமிழகத்தில்  கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கினாலும் குண்டர் சட்டம் பாயும் என்றும் முதலான்ச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்று வரும் … Read more

#BREAKING: ஒரே சமயத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தும், புதிய அதிகாரிகளை நியமித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் உள்ள 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. … Read more

புத்தகம் போதும்… பூங்கொத்து, பொன்னாடைகள் வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸில் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ கட்டமைப்பு மூலமாகவும், முழு ஊரடங்கு காரணமாக தொற்று பரவாமல் தடுக்க அரசு களப்பணி ஆற்றி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள கருணை உள்ளத்துடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு … Read more

#Breaking: கடுமையாகும் ஊரடங்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்தில் கடுமையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை மேற்கொண்டு வருகிறார். நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த 10ம் … Read more

களப்பணியாற்றுவோம், கண்ணீரைத் தடுப்போம்! – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

ஒன்றிணைவோம் வா திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம். களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம் என்று தொடங்கி, மே 7ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே உயிர்வளி உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் அமைப்புகளும் உயிர்வளி செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. தேர்தலுக்கு முன்பாகவே ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினோம். வாக்குப்பதிவு … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

கொரோனா தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர் பாலு, ஆர்எஸ் பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், விசிக சார்பில் சிந்தனை செல்வன், … Read more

பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் – தமிழக அரசு அறிவிப்பு

அமோனியா பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் – சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் நிறுவனத்தில் இன்று அமோனியா பாய்லர் வெடித்ததில், அங்கு பணிபுரிந்து வந்த அம்மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார், கணபதி, சவித்தா மற்றும் விசேஸ்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் … Read more

மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம்!!

கொரோனாவால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்புயுள்ளார். அதில், கொரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி … Read more