நன்கொடை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முதலமைச்சரின் பொதுநிவராண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

மேலும், பெறப்படும் நன்கொடை – மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நன்கொடைகளுக்கு வருமான வரி சட்டம் பிரி 80-இன் கீழ் 100% வரி விலக்கு உண்டு என்றும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்