#breaking: நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

முழு ஊரடங்கில் நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகை, தேநீர் மற்றும் பால் கடை போன்ற அத்தியாவசிய கடைகல் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுயிருந்தது.

இந்த நிலையில், ஓரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை ஒருநாள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பணியாளர்களுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் என்றும் அந்த மாயம் சென்னையில் உள்ள தொழில் காட்டி மைய அலுவலகத்தில் இயங்கும் எனவும் கூறியுள்ளனர்.