கின்னஸ் சாதனைக்காக கட்டப்பட்ட 12,00,000 $ மதிப்பில் தங்க கழிப்பறை!

கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் தற்போது புதுவிதமான முயற்சியாக சீனாவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லட்சம் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் ருபாய் ) மதிப்பில் சீனாவில் ஒரு வெஸ்டர்ன் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது சீனாவில் நடைபெற்ற ஒரு வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் வைர கற்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இன்னொரு பொருளாக … Read more

சீனாவிலும் களமிறங்க உள்ள விஜய்யின் "பிகில்"..!

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில்”இப்படத்தில் நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு  ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து உள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார். “பிகில்” திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படத்தை சீனாவிலும் வெளியிட … Read more

மோடி-ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் 50 குரங்குகள், 35 நாய்கள் அகற்றப்பட்டன…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் இருந்த 50 குரங்குகள் … Read more

இந்தியா – சீனா பிரதமர்கள் சந்திப்பு! மாமல்லபுரத்தின் பேருந்து நிலையம் அதிரடி மாற்றம்!

நாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர்  இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு மறுநாள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனால்  மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாமல்லபுரம் … Read more

சீன பிரதமர் ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி சந்திப்பின் மிக முக்கிய நிகழ்வுகள்!

சீன பிரதமர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.  அயல்நாட்டு தலைவர்கள் சந்திப்பு இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. ஆனால் இந்த முறை தென்மாநிலத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. வரும் வெள்ளியன்று பிற்பகல் சீன பிரதமர் ஜீன்பங்க்  சென்னை வருகிறார். அதன் பின்னர், மறுநாள் சனிக்கிழமை இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜீன்பங்க் ஆகியோர் சந்திப்பு நிகழ்கிறது. இந்த சந்திப்பு மகாபலிபுரம் … Read more

பலநாள் குற்றவாளி 17 வருடம் கழித்து அடர் வனத்தில் பிடிபட்ட சுவாரஸ்யம்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல சிறையில் இருந்து தப்பித்து 17 வருடங்கள் வனவாசம் போல் காட்டிலேயே இருந்து வந்த நபர் தற்போது அந்த குற்றவாளி போலீசார் வசம் பிடிபட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த சாங் சியாங் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெண்களையும் குழந்தைகளையும் கடத்தியதாக  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அதற்காக அவர் சீனா நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அந்த சிறையிலிருந்து … Read more

விமான ஜன்னலை திறந்த பெண் கைது..! தாமதமாக புறப்பட்ட விமானம்

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு புறப்பட விமானத்தில் ஜன்னல் கதவுகளை திறந்தால், பெண் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர். சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமான பணிப் பெண்கள் சீட் பெல்ட்களை அணிய மற்றும் ஜன்னல் மூடப்பட்டுதுள்ளதை ஊறுதிப்படுத்துமாறு அறிவித்தனர். இந்த நிலையில், விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகில் இருந்த அவசர வழி ஜன்னலை திறந்து வைத்திருந்துள்ளார். இதைக் கண்ட விமானப்பணிப் … Read more

சீனாவில் கட்டப்பட்ட உலகின் மிக பெரிய பாலம் திறப்பு..!

சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

யூ-டியூப் விடியோவால் வந்த வினையம்..! உயிரிழந்த 14 வயது சிறுமி!

சீனாவில் சேர்ந்த 14 வயது சிறுமியான, சேசே. இவர், யூடியூப் வீடியோவை பார்த்து நிறைய செய்து வந்தார். அந்த வகையில், காலி டின் ஒன்றில் தீ மூட்டி பாப் கார்னை எளிமையாக செய்யலாம் என்ற விடியோவை பார்த்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிறுமி, அதே போல் தனது வீட்டில் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், அதற்காக அனைத்து பொருட்களையும் தயார் செய்துள்ளார். இதற்கு ஆல்கஹால் டின் ஒன்றை அவர் பயன்படுத்தியதால், தீ பற்ற வைத்தவுடன் அந்த டின் கண்ணிமைக்கும் … Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின!

சீனாவில், சிச்சுவான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 1000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த நிலநடுக்கத்தால் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாவும், 60க்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.