ஆசிய போட்டி: குத்துச் சண்டையில் தங்கத்தை தட்டித் தூக்கியது இந்தியா..!!

ஆசிய விளையாட்டு : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய போட்டியில் ஆண்கள் குத்துச் சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமீத் பங்கல் தங்கம் வென்றார். இதன் மூலம் 2018ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் முறையாக 66 பதக்கங்களை வென்று  சாதனை புரிந்துள்ளது.இதுவரை 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU  

இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி…!!! இறுதி போட்டியில் மேரி கோம்…!!!

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில்,இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியுடன் இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினார். மொத்தம் 3 சுற்றுகள் நடந்த இந்த போட்டியில், தில்ருக்ஷியை வீழ்த்தி மேரி கோம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

குத்துசண்டை பயிலும் த்ரிஷா…!!

தமிழக திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. அண்மை காலமாக அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘மோகினி’ படம் வெளியாக தயாராகவுள்ளது. மேலும் அரவிந்தசாமியுடன் நடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில் தற்போது த்ரிஷா மிக ஆக்ரோஷமாக பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் … Read more

ஆசிய பசிஃபிக் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 10ஆவது முறையாக வென்று பட்டத்தை தக்கவைத்தார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்

இந்தியாவிற்காக ஒலிம்பிக் மற்றும் சர்வதேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ள இந்தியாவின் விஜேந்தர் சிங் .தற்போது இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழ்கிறார், இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் (WBO Oriental) மற்றும் ஆசிய பசிபிக் (Asia-Pacific)  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மோதினார். 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் … Read more