ஆசிய பசிஃபிக் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 10ஆவது முறையாக வென்று பட்டத்தை தக்கவைத்தார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்

இந்தியாவிற்காக ஒலிம்பிக் மற்றும் சர்வதேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ள இந்தியாவின் விஜேந்தர் சிங் .தற்போது இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழ்கிறார், இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் (WBO Oriental) மற்றும் ஆசிய பசிபிக் (Asia-Pacific)  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மோதினார். 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர்.

விஜேந்தர்சிங் தனது பட்டங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகக் களமிறங்கும் இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த பந்தயம் இன்று (23-ந்தேதி) ஜெய்ப்பூரில் நடந்தது.

இந்நிலையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மோதி வென்று ஆசிய பசிஃபிக் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 10ஆவது முறையாக வென்று பட்டத்தை தக்கவைத்தார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்.

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment