என்ன கனி.. பைனலையும் காரக்குழம்பா..? கனியைக் கலாய்த்த ஏ ஆர் ரஹ்மான்..!!

என்ன கனி பைனலையும் காரக்குழம்பா என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் குக் வித் கோமாளி கனியை கலாய்த்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதுதான். வாரம் வாரம் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்து … Read more

90ஸ் கிட்ஸுக்கு பிடித்த “பவர் ரேஞ்சர்ஸ்” பாடலை பாடியது இசைப்புயல்..?

பவர் ரேஞ்சர்ஸ் எஸ்பிடி தொடரில் தொடக்கத்தில் வரும் “பவர் ரேஞ்சர்ஸ் இந்த உலகத்தை காப்போம் ” என்ற பாடலை பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. 90ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த முக்கியமான பொழுதுபோக்கு தொடரில் ஒன்று பவர் ரேஞ்சர்ஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்போது இந்த தொடரை பார்த்துவிட்டு தனது பிடித்த பவர் ரேஞ்சர்ஸ் பொம்மையாக கலர் கலராக வாங்கி விளையாடி வந்தனர். தற்போது வரை … Read more

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு.. இசையமைப்பாளர் யார் தெரியுமா..?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ராமச்சரனின் 15வது படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது அவர் விரைவில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் … Read more

ரஹ்மானுடன் கைகோர்க்கும் தனுஷ் மாஸ் அப்டேட்

 இசைபுயல் AR ரகுமானின்  இசையமைப்பில் நடிகர் தனுஷ் முதல்முறையாக பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் தனது தனித்திறமையால் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவூட், ஹாலிவூட் என்று கலக்கி வருபவர். இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஜ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர்  தனுஷ் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் பாடல் … Read more

கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!

கமல் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்தினை குறித்த தகவலை கூற இசைப்புயல் மற்றும் உலகநாயகன் இணைந்து நேரலையில் சந்திப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கமல் ‘தலைவன் இருக்கின்றான் ‘ படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து … Read more

தலைவன் இருக்கிறன் படத்திற்கு பிறகு இசைப்புயலை அனைவரும் பாராட்டுவர்! – கமலஹாசன் பெருமிதம்!

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்கி, அதில் அவரே நடித்து, அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும் இதுகுறித்து கமல் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், “இந்த படத்தில் இரண்டு பாடல்கள் முடிவடைந்து விட்டது. இப்பட ரிலீசிற்கு பிறகு A.R.ரஹ்மானின் இசைக்கூறித்தே அனைவரும் பேசுவார்கள்’ என பெருமையாக கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் புதிய கௌரவம் ! சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக நியமனம்…….

தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின்  அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் … Read more

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று !

ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்: 6-1-1966 இந்திய திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 1966-ம் வருடம் இதே நாளில் சென்னையில் பிறந்தார். இவருடைய அப்பா சேகர் மலையாள திரைப்படத் துறையில இசையமைப்பாளராக பணியாற்றியவர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் ஆகிய கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக்கொண்டார். தனது 11-வது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு … Read more