#ElectionBreaking:பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை-காங்கிரஸ்,பாஜக நிலை என்ன?..!

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ள நிலையில்,அதில்  21 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் … Read more

#Breaking:”ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் இவர்தான்” – அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு!

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.மேலும்,தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்,ஒரு விழா நடைபெறுவதையொட்டி,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே … Read more

ஆம் ஆத்மி கட்சி 3-ஆம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது..!

ஆம் ஆத்மி கட்சி 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை வெளியிட்டது. அடுத்தாண்டு பஞ்சாப், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய  மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற  மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைதக்க வைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது. பஞ்சாப்  மாநிலத்தில்  35.20% வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி 38.83% வாக்குகள் பெரும் … Read more

#ElectionBreaking:உத்தரகாண்ட் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கர்னல் அஜய் கோதியால் (ஓய்வு) உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

சிலிண்டர் விலை உயர்வு – பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி!

ஒரு வருடத்திற்குள் சமையல் எரிவாயு விலை ரூ.305க்கு மேல் உயர்ந்துள்ளது என டெல்லி ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு. சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். இதுபோன்று மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த வருடத்தில் சமையல் எரிவாயு விலை … Read more

வீட்டில் ஒருவருக்கு வேலை.. மாதம் ரூ.3,000 உதவித்தொகை – டெல்லி முதல்வர் அதிரடி வாக்குறுதி!

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இளைஞருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு … Read more

டெல்லி ஆம் ஆத்மி அரசுடன் கைகோர்த்த நடிகர் சோனு சூட் மீது ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகார்!

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி … Read more

Breaking:ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு..!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக(National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக (National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல,கட்சியின் செயலாளராக பங்கஜ் குப்தா மற்றும் பொருளாளராக என்.டி.குப்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் பொற்கோயிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால்..!

பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் சென்றுள்ளார். அங்கிருக்கும் புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 177 தொகுதிகளை உடைய பஞ்சாபில்  காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி … Read more

பாஜகவின் நாடகம் பாராட்டத்தக்கது ! சீனாவிடம் இருந்து ரூ.5700 கோடி கடன் பெற்றதாக ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டு

சீனாவிடம் இருந்து மத்திய அரசு ரூ.5700 கோடி கடன் பெற்றதாக ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தை உருவாக்கியது. இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் … Read more