விசிக பேரணி..! திமுக, காங்கிரஸ்,மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் – திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை.  அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்க்கு நாம் தமிழர் கட்சி, திராவிடர் கட்சி போன்ற காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் … Read more

அக்.2ல் நடைபெற உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் பேரணி – ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்

மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்.  அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த பேரணியில் திரவிட கழகமும் கலந்து கொள்ளும் என ஆசிரியர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.! திருமாவளவன் கடும் விமர்சனம்.!

பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார்.  வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று  சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் … Read more

இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது – திருமாவளவன்

மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொன்னார்? என திருமாவளவன் கேள்வி.  விடுதலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பத்மஶ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திநார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொல்லினார்?; இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது … Read more

சிறுபான்மையின வெறுப்பு அரசியலைச் சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டும் – விசிக

இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என திருமாவளவன் அறிக்கை.  பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை, இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது! இவ்வாறான சிறுபான்மையின வெறுப்பு அரசியலைச் சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் … Read more

பார்ப்பன இந்து எச்.இராஜா என்ன சூத்திரரா? – திருமாவளவன்

ஆ.ராசா மனுநூலில் கூறியருப்பதைத் தான் எடுத்துரைத்துள்ளார் என திருமாவளவன் பேட்டி.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், ஆ.ராசா மனுநூலில் கூறியருப்பதைத் தான் எடுத்துரைத்துள்ளார். சூத்திரர் எனப்படும் … Read more

விமர்சனங்களுக்கு நீதிமன்றங்கள் அப்பாற்படடவையா? நீதிபதிகளும் அதற்கு அப்பாற்பட்டவர்களா? – திருமாவளவன்

நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது, கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என விசிக அறிக்கை.  சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக உள்ளது. நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் … Read more

பசிப்பிணி மருத்துவராய் பரிணாமம் பெற்றுள்ள முதல்வர் – திருமாவளவன்

காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம் என திருமாவளவன் ட்வீட்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு அரசியல் பிரபலங்கள் பலரும்  தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்மாதிரித் திட்டம். … Read more

#Breaking:சற்று முன்…விசிக பிரமுகர் வீடு உட்பட 50 இடங்களில் ரெய்டு!

திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை … Read more

உச்சநீதிமன்றத்தின் இந்த செயல் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது – திருமாவளவன்

நூபுர்சர்மாவின் இழிசெயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது என திருமாவளவன் ட்வீட்.  நுபுர் சர்மா தன் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.   இது குறித்து, நீதிபதிகள் கூறுகையில், நுபுர் சர்மா மற்றும் அவரது வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு நுபுர் … Read more