#BREAKING: தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்ற கோவில் நிர்வாகம்..!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்து இருந்தது. இந்நிலையில், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழிகாட்டுதல்படி … Read more

நாளை முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல தடுப்பூசி அவசியம்..!

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி  டிசம்பர் 13-ஆம் தேதி அதாவது நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே … Read more

மதுரை:மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா.! வரும் 9 தேதி கோலகலத்துடன் தொடங்குகிறது..!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழா நடைபெறும் 14-ந்தேதி வரை காலை, மாலையில் சந்தரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது. 21-ந் தேதி சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம்..!!77 நாட்களுக்குப் பிறகு திறப்பு..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில், கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டப முகப்பு சேதமடைந்தது. புனரமைப்புப் பணிகள்  நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆயிரம்கால் மண்டபத்திற்குப் போகும் வழி  சீரமைக்கப்பட்டுள்ளது. அதனால் 77 நாட்களுக்குப் பிறகு,  ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்