ரேசன் வாங்க ஆதார் எண் போதும் – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை என்றும்,மாறாக ஆதார் எண்ணை தெரிவித்து பொருட்களை  பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: இது தொடர்பாக,பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவையின் கேள்வி நேரத்தின்போது நேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: “மத்திய அரசானது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.புலம்பெயர் தொழிலாளர்கள் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்களா? – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

திருவாரூர்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,தற்போது கொரோனா பரவல் முன்பை விட ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வேளையில்,தமிழகத்தில் இனி கொரோனா … Read more

முதல்வர் விரைவில் வெளியிடுவார் – அமைச்சர் காமராஜ்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டம் தமிழகம் முழுவதும் எப்போது விரிவுபடுத்தப்படும் என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால், ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதியும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரே நாடு … Read more