“பல்கலை.பேராசிரியர்களுக்கு 7 வது குழு ஊதியம்;தமிழக அரசு சிறப்பு நிதி” – ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்ணாமலை பல்கலை.பேராசிரியர்களுக்கு ஏழாவது குழு ஊதியத்தை வழங்க சிறப்பு நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு தான் அதன் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றால் அது எந்தக் காலத்திலும் நடக்க வாய்ப்பில்லை என்றும்,இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்,அதற்குத் தேவைப்படும் … Read more

#BREAKING : சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதா நிறைவேற்றம்…!

சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதா நிறைவேற்றம். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தாக்கல் செய்தார். அதிமுகவினர் சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், அதிமுக எம்ஏல்ஏக்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா … Read more

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு – நாளை சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கல். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கலாகிறது. தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சட்டப்பேரவையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் … Read more