ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள்!

நேற்று நடந்த ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகி உள்ளது. தொகுதி முழுவதும் 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ‘விவிபேட்’ இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பிற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் 72.67 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதனை தொடர்ந்து, தற்போது 77.68% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது மற்ற தேர்தலை விட 10 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஆர்.கே.நகரில் 3 வாக்குச்சாவடிகளில் 90% வாக்கு பதிவாகி உள்ளது, அந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,28,234 ஆகும். இதில் ஆண்கள் 1,10,903, பெண்கள் 1,17,232 பெண்கள் மற்றும் 99 திருநங்கைகள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

source: dinasuvadu.com

Leave a Comment