உச்சத்தில் பெட்ரோல் ,டீசல் விலை ..!எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…!

டெல்லியில் எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.
Image result for பெட்ரோல்
இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர  மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் தொடங்கியது. நிதி ஆயோக் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
 

Leave a Comment