பிரபாஸ் – பிரித்விராஜ் நடிப்பில் மிரட்டும் “சலார்” படத்தின் ட்ரெய்லர்.!

‘சலார்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7.19 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தை கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் இதில், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், டின்னு ஆனந்த், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம், தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனேவே, 22ம் தேதி ஷாருக்கானின் டுங்கி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டுங்கி படத்துடன் சலார் திரைப்படம் மோதவுள்ளதால், என்ன நடக்க போகிறது என கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆதிபுருஷ் திரைப்பட தோல்வியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. அதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது.  திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களை உள்ள நிலையில், இந்த ட்ரைலர்  ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

கிருஸ்துமஸ் பாண்டிகை முன்னிட்டு ‘சலார்’ வெளியீடு! அங்க தான் டுவிஸ்ட்டே இருக்கு!!

ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, கேஜிஎப்-ஐ போல பிரம்மண்டமாக காட்சிகள் அமைந்துள்ளது. மேலும், ட்ரைலரில் காட்சிகள் ஒவ்வொன்றும் கேஜிஎப் படத்தில் இடம் பெற்றிருப்பது போல் தெரிகிறது. இதோ அந்த ட்ரைலர் …

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.