400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

PM Modi : மக்களவை தேர்தல் அட்டவணை வெளியானதை தொடர்ந்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டு, மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்களை தொடங்கி விட்டனர். அந்தவகையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் இன்று மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

Read More – அதிமுக சார்பாக பேசிய ஓ.பி.எஸ்.! பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ருசிகரம்.!

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், பாஜகவின் கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளனர். அதன்படி, சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, பாஜக பொதுக்கூட்டத்தில் ‘பாரத அன்னை வாழ்க’ என பிரதமர் மோடி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதாவது, சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன், இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன. கோவையில் நேற்று மக்கள் கடலில் நீந்திக்கொண்டே பயணம் செய்தேன். பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவுக்கு தூக்கமே இல்லை.

Read More – மக்களவை தேர்தல்: விசிக சார்பில் மீண்டும் திருமாவளவன், ரவிக்குமார் போட்டி!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், எனக்கும் கிடைக்கும் ஆதரவை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு வளர்ச்சியடைய மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும். அதுதான் இலக்கு, அது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

என்டிஏ கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நோக்கம். பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது. ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும் என்றார்.

Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!

மேலும் பிரதமர் கூறியதாவது, தமிழ்நாட்டு மக்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டார்கள். ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் ஒவ்வொரு ஓட்டும் என்டிஏ கூட்டணிக்கு தான் என முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் வேண்டும் மோடி என மக்கள் முடிவெடுத்துள்ளதால் வெற்றி எண்ணிக்கை நமது இலக்கை தாண்டும்.
விவசாயிகள் பயனடைய, பாரதம் தன்னிறைவு பெற தேர்தலில் 400க்கும் மேல் வெற்றி பெற வேண்டும்.

இந்து தர்மத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது. இந்து மதத்தைத் தவிர பிற மதங்களை திமுக – காங்கிரஸ் பேசுவதில்லை. மற்ற மதத்தினரை இந்தியா கூட்டணி விமர்சிப்பதே இல்லை. இந்தியா கூட்டணியினர் செங்கோலை அவமதித்தவர்கள் என கூறிய பிரதமர், பெண்கள் தான் பாஜகவின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்கள். சுப்பிரமணிய பாரதி வழியில் நானும் பெண் சக்திகளை வழிபடுகிறேன் என்றும் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது இலக்கு எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment