அதிமுக சார்பாக பேசிய ஓ.பி.எஸ்.! பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ருசிகரம்.!

OPS : இன்று பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடத்தில் 6வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

Read More – தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.!

பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் (பாமக), அன்புமணி ராமதாஸ் (பாமக),  ஜி.கே.வாசன் (தமாகா),  டிடிவி தினகரன் (அமமுக ), ஓ.பன்னீர்செல்வம்(அதிமுகதொஉமீகு), ஜான் பாண்டியன்,  உள்ளிட்டோரும், அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன், சரத்குமார் , குஷ்பூ உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

அப்போது அன்புமணி ராமதாஸ் பேசி முடித்த பிறகு அடுத்ததாக ஓபிஎஸ்-ஐ பேச அழைக்கையில், அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என குறிப்பிட்டனர். அதன் பிறகு பேசிய ஓபிஎஸ், இந்த நாட்டின் தங்கமாக, சிங்கமாக பிரதமர் மோடி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசுகளுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளார் என கூறி மீண்டும் மோடி பிரதமராக வருவார் என தனது பேச்சில் குறிப்பிட்டார் ஓபிஎஸ்.

Read More – அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டி! தேர்தல் ஆணையத்திடம் மனு

அதிமுக சின்னத்தை, கொடியை ,  கட்சி பெயரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி இருந்தது. அதில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை நிரந்தரமாக பயன்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment