வெள்ளியங்கிரி மலைக்கு போறதுக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

வெள்ளியங்கிரி மலை -தென் கைலாயம் எனக் கூறப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு சிவனை பார்க்கச் செல்வது மிக கடினம் என்றாலும் கடந்து செல்லும் பாதை மிக அழகானது. வெள்ளையங்கிரி மலையில் அப்படி என்னதான் ரகசியம் உள்ளது மலைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் மலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கடினமான மலையேற்றங்களில் வெள்ளியங்கிரி மலையற்றமும் ஒன்று. எத்தனையோ நபர்கள் பாதியிலேயே திரும்பி வந்திருக்கிறார்கள் .அதே நேரத்தில் வயது முதிர்ந்தவர்களும், மாற்று திறனாளிகளும் கூட மலைக்குச் சென்று சிவனை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார்கள்.

வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ள இடம்:

கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஈஷா செல்லும் வழியில் தான் உள்ளது .மேற்கு தொடர்ச்சி மலை தான் வெள்ளியங்கிரி மலை என அழைக்கப்படுகிறது.

வெள்ளிங்கிரி மலையின் சிறப்பு:

இங்கு அகஸ்தியர் தவம் செய்த இடமாகவும், சிவபெருமான் நான்கு யுகங்களுக்கு முன் சுயம்பு மூர்த்தியாக ஏழாவது சிகரத்தில் தோன்றியுள்ளார்.

பொதுவாக சிவன் ராத்திரியில் இருந்து சித்ரா பௌர்ணமி வரை இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை  அடிவாரத்தில் மூங்கில் கம்புகள் கொடுக்கப்படும் அதை பெற்றுக்கொண்டு நடைப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்.

முதல் மலை :

முதல் மலை குண்டலினி சக்தியின் மூலாதானத்தை குறிக்கிறது. குண்டலினிக்கு அதிபதியான  வெள்ளை விநாயகர் இங்கு  அமைந்துள்ளார், மேலும் இங்கு அமைந்துள்ள படிக்கட்டுகள் கற்களால் ஆனவையாகும்.

இரண்டாம் மலை :

இந்த இரண்டாவது மலையில் வழுக்கு  பாறைகள் அதிகம் காணப்படும். கவனமுடன் செல்ல வேண்டிய பகுதியாகும். இங்கு பாம்பாட்டி சித்தருக்கு முருகர் காட்சி கொடுத்த இடம் ஆகும் ,சுனை நீரும் இங்கு உள்ளது. நம் உடலின் சுவாதிஸ்டானா சக்கரத்தோடு தொடர்புடையதாகும்.

மூன்றாவது மலை :

வயிற்றில் உள்ள மணிபூரக சக்கரத்தின் அம்சமாகவும், கைதட்டி சுணையோடும் காணப்படுகிறது.

நான்காவது மலை: 

இது இதயத்தின் அனாகத சக்ராவுடன்  தொடர்புடையதாகும். ஒட்டச் சித்தர் சமாதி இங்கு அமைந்துள்ளது.

ஐந்தாவது மலை:

இந்த மலையில் சிறு தாவரங்கள் காணப்படும் மரங்களின் அளவு குறைவாக இருக்கும் .மேலும் சேறு போன்ற மண்களும் காணப்படும். இது தொண்டையில் உள்ள சக்ராவை குறிப்பதாகும் .இங்கு ஆண்டி சுனை அமைந்துள்ளது.

ஆறாவது மலை:

இது திருநீருமலை எனவும் கூறப்படுகிறது, ஏனென்றால் இங்கு உள்ள மண் வெள்ளை நிறமாக இருக்கும். இது புருவம் மத்தியில் உள்ள சக்கராவை குறிப்பதாகும்.

ஏழாவது மலை:

இங்கு பஞ்சபூதங்களின் அம்சமாக சிவபெருமான் காட்சி தருகிறார். சூரிய உதயத்தை பார்ப்பது சிவ தரிசனம் எனவும் கருதப்படுகிறது .இந்த மலை  உச்சம் தலையில் அமைந்துள்ள சக்ராவுடன் தொடர்புடையதாகும்.

மலை ஏற எடுத்துக்கொள்ளும் நேரம் :

  • வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது சிகரத்தை அடைய கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆவது எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் இங்கு எடுத்துச் செல்லக்கூடாது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இங்கு செல்வதற்கு 1 மாதம் முன்பே நடை பயிற்சி மேற்கொண்டு  மலை ஏற  உங்கள் உடலை தகுதி படுத்திக் கொள்ளவேண்டும் .இங்கு செல்ல உடல் பலமும் மனபலமும் அவசியம் .வெயில் நேரத்தில் மலை ஏறுவதை குறைத்து கொள்ளவும் .

பல கோவில்களில் நாம் பணம் கொடுத்தால் இறைவனை தரிசனம் செய்து விடலாம், ஆனால் இங்கு நீங்கள் மனம் வைத்தால் மட்டுமே இறைவனை தரிசிக்க  முடியும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment