அட்டகாசமான ஸ்டீயரிங் அம்சங்களுடன் TATA எலெக்ட்ரிக்கல் கார்.. விரைவில் களமிறங்கும் Punch EV.!

Punch EV

டாடா பஞ்ச் இவியில் (Tata Punch EV) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வெளியாகியுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் டாடா பஞ்ச் எஸ்யூவியின் இவி காரை (Tata Punch EV) அறிமுகப்படுத்தவுள்ளது. தற்பொழுது, இந்த டாடா பஞ்ச் இவி சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பஞ்ச் இவியில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வெளியாகியுள்ளது. பஞ்ச் இவி வெளிப்புறம்: இந்த பஞ்ச் இவியில் புதிய அலாய் வீல்கள், புரொஜெக்டர் … Read more

அதிர்ச்சி! ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை..!

neet student suicide

ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி 2 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், உதய்பூரைச் சேர்ந்த 18 வயது நீட் தேர்வு பயிற்சி மாணவர் நேற்று காலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அப்பகுதி காவல்துறை கூறுகையில், … Read more

WC2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் விலை எவ்வளவு, முன்பதிவு பற்றிய தகவல்கள் இங்கே…

ICC WC tickets

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்… உலகக்கோப்பை 2023: மிகவும் எதிர்பார்த்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 48 போட்டிகள் இந்தியாவின் 10 நகர மைதானங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 19இல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அக்டோபர் 5 இல் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத்தின் நரேந்திரமோடி … Read more

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு.!

RN Ravi

சேலம் பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் இருந்து பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா தொடங்கி தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.  இந்திய தொழில்நுட்ப கழக முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். ஏற்கனவே, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். தற்போது, இந்த விழாவில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் அருள், சதாசிவம் வெளிநடப்பு செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் … Read more

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்க முடிவு..!

tamilnadu government

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சிகிச்சை பெரும் தொழிலார்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு. கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ₹12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் … Read more

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்… ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை.!

Stalin Meeting KV

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதை, பல்வேறு துறை அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில்  இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசுப்பணிகள் எந்த அளவுக்கு வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டினார். அரசுப்பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுவதற்கு, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது தான் சான்று, … Read more

பரபரப்பு: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 14 பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள்.!

Mexico

மெக்சிகோவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 14 ஊழியர்களை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், பொது ஊழியர்கள் உட்பட 14 பேர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், கடத்தப்பட்டதிற்கான காரணமும், அவர்களை தேடும் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், Ocozocoautla மற்றும் Tuxtla Gutierrez … Read more

பக்காவான பெர்பார்மன்ஸ்..இந்தியாவில் களமிறங்கும் ‘OnePlus Nord 3 5G’ ஸ்மார்ட்போன்..! எப்போது அறிமுகம் தெரியுமா..?

OnePlusNord3

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் பிரியர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த, ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு அதன் அறிமுகத்தை ஒன்பிளஸ் (OnePlus) உறுதி செய்தது. The #OnePlusNord3 5G launches 7PM, July 5th. Don’t miss it. … Read more

திருப்பரங்குன்றம் தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு தடை.? மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Madurai High Court

திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு தடை விதிக்க கோரிய கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருப்பரங்குன்றம் மலைப்பகுதி நெல்லி தோப்பில் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், திருப்பரங்குன்றம் நெல்லிதோப்பு மலை பகுதியில் தான் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதால் காசி விஸ்வநாதர் … Read more

நாட்டிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம்..!

ambulance

நாட்டிலேயே முதன் முறையாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  நாட்டிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த தொழில்நுட்பம் அவருவமைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 40 சிக்னலில் இந்த சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.