சிரிக்க தடை.! மது அருந்த தடை.! ஷாப்பிங் செல்ல தடை.! வட கொரியாவில் புதிய கட்டுப்பாடுகள்.!

சிரிக்க தடை.! மது அருந்த தடை.! ஷாப்பிங் செல்ல தடை.! வட கொரியாவில் புதிய கட்டுப்பாடுகள்.!

Default Image

வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 10 நாள் நினைவு அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் (Kim Jong il) அவர்களின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 17 ) அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி வட கொரியா அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை வட கொரியாவில் விதித்துள்ளது. அதுவும் இன்று முதல் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 நாள் நினைவு தினம் அனுசரிப்பை முன்னிட்டு அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளில் முக்கியமானவை என்னவென்றால், 10 நாட்கள் நாட்டுமக்கள் சிரிக்க கூடாது. 10 நாட்கள் யாரும் மது அருந்த கூடாது. தேவையான அதவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்ற பொருட்களை வாங்க ஷாப்பிங் செல்ல கூடாது.

பிறந்தநாள் பார்ட்டி, இறுதி சடங்கு ஊர்வலங்கள் போன்றவை பிரமாண்டமாக நடத்த கூடாது. என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாம்.

ஏற்கனவே இதே போல கடந்த முறை நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது, வட கொரியாவில் பலர் மது அருந்தியதாகவும், கட்டுப்பாடுகளை மீறியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதாம்.

Join our channel google news Youtube