மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே(Moto Z3 Play)

 

மோட்டோரோலா நிறுவனமானது, மிக விரைவில் அதன் ஜி6 தொடரை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், மோட்டோ இசெட்3 பிளே(Moto Z3 Play) ஸ்மார்ட்போன் சார்ந்த 360 டிகிரி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வெளியான 360 டிகிரி வீடியோவில் காட்சிப்படும் மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது அதன் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது. அதில் இருந்து, இசெட்3 ப்ளே ஆனது மோட்டோரோலாவின் பழைய ஸ்மார்ட்போன்களை விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை என்பது புலப்படுகிறது.

ஒரு மெல்லிய வடிவமைப்பிலான 6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள மோட்டோ இசெட்3 ப்ளே-வின் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆனது ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் உள்ளது. இது உயரமான டிஸ்பிளேவிற்கு இடமளிக்கிறது. பவர் பட்டன் ஆனது இடது புறத்தில் அமைந்திருக்க, வால்யூம் ராக்கர்ஸ் அதேசமயம் தொகுதி ராக்கர்ஸ் பட்டன் ஆனது வலது பக்கத்தில் அமைந்திருக்கிறது.

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 12எம்பி + 8எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை பின்பக்கத்திலும், ஒரு 5எம்பி கேமராவை முன்பக்கத்தில் கொண்டிருக்கும். அளவீட்டில் 156.4 x 76.47 மிமீ கொண்டுள்ள இந்த மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது, மோட்டோ மோட்ஸ் ஆதரவும் கொண்டுள்ளது. பின்பக்கத்தை பொறுத்தமட்டில், மோட்டோ பிராண்டிங் லோகோ மற்றும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

கீழே ஒரு யூஎஸ்பி -சி போர்ட் மற்றும் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் ஒன்றையும், மேல்பக்கத்தில் சிம் பிளேட் ஒன்றையும் காணமுடிகிறது. வெளியான அறிக்கையின்படி, மோட்டோ இசெட்3 பிளே ஆனது, ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மற்றும் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். மொத்தம் இரண்டு மெமரி வேரியன்ட்களில் – 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு – வெளியாகும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை சுமார் ரூ.32,500/- என்று இருக்கலாம்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment