மோடி , மோடி , மோடி…..பீதியில் எதிர்கட்சிகள் உளறல்…மோடி விமர்சனம்…!!

இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார்.

இந்நிலையில் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினார். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர் என்று மோடி தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் , எதிர்க்கட்சியினர் எந்த கேள்வி கேட்டாலும் அவர்களின் பதில் மோடி மோடி மோடி என்பதே ஆகும் என்று தெரிவித்தார். விவசாய வளர்ச்சி திட்டம் உள்ளதா என்றால் அவர்கள் மோடி என்பார்கள்.சிறு குறு தொழில் வளர்ச்சி பற்றி கேட்டால் மோடி என்பார்கள் ஆனால் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் திட்டம் பலிக்காது என்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment